கொக்கட்டிச்சோலை குணா மல்ரி சொப்யின் 3ம்ஆண்டு நிறைவில் மாணவர்களுக்கு உதவி

2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மட்டக்களப்பு மேற்கு வலய பட்டிப்பளைக் கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு கொக்கட்டிச்சோலை குணா மல்ரி சொப் உரிமையாளரால் 6 லட்சம் பெறுமதியான பொருள்கள் மற்றும் பண நன்கொடைகளும் வழங்கப்பட்டன.

கொக்கட்டிச்சோலை நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள முதலைக்குடா கனிஸ்ர வித்தியாலயத்தின் 10 மாணவர்கள், கொக்கட்டிச்சோலை ராம கிருஸ்ண மிசன் வித்pயலயத்தின் 07 மாணவர்கள், முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் 05 மாணவர்கள் முனைக்காடு விவேகானந்தாவின் 04 மாணவர்கள் என மொத்தம் 35 மாணவ மாணவர்களுக்கு பரிசுகளும் உதவுத் தொகைகளும் வழங்கப்பட்டன.

முதலைக்குடா கனிஸ்ர வித்தியாலயத்தில் சித்தியடைந்த 10 மாணவர்களுக்கும் ரூபா 5000 மக்கள் வங்கியில் வைப்பிட்ட சேமிப்பு புத்தகங்களும், பாடசாலை அபிவிருத்திக்கு 40 ஆயிரம் ரூபாவும் கற்பித்த ஆசிரியருக்கு 10 ஆயிரம் ரூபாவும், மேலும் 35 பேருக்கு 1350 ருபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

கோட்ட மட்டத்தில் அதி கூடிய புள்ளியான 181ஐப்பெற்ற பிபிசனா வைரமுத்துவிற்கு புதிய பைசிக்கிள் ஒன்றுமு; வழங்கப்பட்டது. அதே நேரம், கண்பார்வையற்ற நிலையிலும் 151 புள்ளி பெற்ற பா.பிரசோபனுக்கு 10 அயிரம் ரூபா காசோலையும் வழங்கப்பட்டது. 
வறுமைக்கோட்டிற்கீழ் வாழும் முதியோர்களுக்கு 70 மூடை அரிசியும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இந் நிகழ்வில், மண்டக்களப்பு மேற்கு வலயத்தின் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி)  ச.மகேந்திரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) ஞா சிறிநேசனும் , கொக்கட்டிச்சோலை பதில் பொறுப்பதிகாரி கேரத், மக்கள் வங்கி முகாமையாளர் எம்மோகனதாஸ், நிறுவனங்களின் பிரதிநிதிகள், பலரும் கலந்து கொண்டார்.

இவர் இவ்வாறான மாணவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வருடமும் இவ்வாறான பரிசளிப்பு விழாவை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.