ஐரோப்பிய ஒன்றிய நிதியில் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

( விட்னி,ராஜ்  )

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற  நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட  685.38 மில்லியன் ரூபா நன்கொடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும்  அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்  இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி பி .எஸ் .எம் சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  ஆர் .நெடுஞ்செழியன் , ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதி முகாமையாளர் திருமதி .நுஸ்ரத் மற்று 14 பிரதேச செயலக பிரதேச  செயலாளர்கள் , மட்டக்களப்பு மாவட்ட 5 கல்வி வலய பணிப்பாளர்கள் , உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் , மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .