ஊறணிச்சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பூசகர் படுகாயம்

(விட்னி,ராஜ் ) 
                                                                                                               மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி  சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் கோயில் பூசகர் ஒருவர்  படுகாயம் அடைந்த நிலையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .


இவர் கன்னகுடாவை சேர்ந்த கோபாலபிள்ளை (வயது 47) ஆறுமுகத்தான் குடியிருப்பில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர் .