“வென்றெடுத்த சுதந்திரத்தைப் பாதுகாப்போம்”ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்க கூட்டம்

“வென்றெடுத்த சுதந்திரத்தைப் பாதுகாப்போம், எமது உரிமைகளைக் காத்திடுவோம்” எனும் தொனிப்பொருளில், தேசிய சுதந்திர தொழிலாளர் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து  மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (25) கூட்டம் நடத்தினர்.


தேசிய சுதந்திர தொழிற்சங்கத்துக்குட்பட்ட பத்துக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில், இன மத பிரதேச வேறுபாடுகள் இன்றி செயற்பட்டு வரும் ஜனாதிபதியை எல்லோரும் ஆதரிப்பது எமது கடமையாகும் என, நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம செயலாளர் லெஸ்லி தேவேந்திரா, ஜனாதிபதியின் தொழில் சங்க இணைப்புச் செயலாளர் என்.வி. கல்கட்டிய, அரச கூட்டுத்தாபன தனியார் வியாபாரிகள் சங்க செயலாளர் றஞ்சித் ஹெட்டியாராட்சி,ஸ்ரீலங்கா சுதந்திர புகையிரத ஊழியர் சங்க பிரதம செயலாளர் நதிரா மனோச்,  மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம். ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன் ஜனாதிபதிக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.