சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் வருடாந்த பொதுக்கூட்;டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நிலையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக பழைய மாணவர் சங்க தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.தவராஜா தெரிவித்தார்.


சிவானந்தா தேசிய பாடசாலையின் மாணவர்களுக்கு கல்வித்திணைக்களத்தினால் நடத்தப்பட்ட முக்கிய பரீட்சை காரணமாகவே பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டம் எதிர்வரும் 09ஆம் திகதி காலை 9.00மணிக்கு மீண்டும் நடைபெறும் எனவும் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறும் பழைய மாணவர் சங்க தலைவர் தெரிவித்தார்.

இதன்மூலம் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருத்ததையும் தெரிவித்துக்கொள்வதாகவும் பழைய மாணவர் சங்க தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.தவராஜா தெரிவித்தார்.