விசேட தேவையுடைய சிறுவர்களையும் பாலர் பாடசாலை மாணவர்களையும் இணைத்து நடத்தப்பட்ட நிகழ்வு

விசேட தேவையுடைய சிறுவர்களையும் பாலர் பாடசாலை மாணவர்களையும் இணைத்து நடத்தப்பட்ட விசேட சிறுவர் தின நிகழ்வு நேற்று மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.


லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த விசேட நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

சமூகத்தில் சிறுவர்கள் மத்தியில் விசேட தேவையுடைய சிறுவர்களின் முக்கியத்துவத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

லெடர் ஒப் கோப் நிறுவகத்தின் பணிப்பாளர் எல்;.ஆர்.டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர் அருள்மொழி, மட்டக்களப்பு வலய முன்பள்ளிக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் புவிராஜ் ஆகியோர் அதிதியாக கலந்துகொண்டனர்.

பாலர் பாடசாலையில் கற்கும் காலம் தொடக்கம் விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பிலான உணர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக லெடர் ஒப் கோப் நிறுவகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாலர் பாடசாலைகளில் இருந்து சுமார் 60 மாணவர்களும் விசேட தேவையுடைய பாடசாலைகளில் இருந்து சுமார் 75 மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர்களின் பல்வேறு இரு பாடசாலைகளின் மாணவர்களினதும் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.