செல்வராஜன் எழுதிய 'இல்லாமல் போன இன்பங்கள்' நூல் அறிமுக நிகழ்வு

மட்டக்களப்பு, கோவிலூர் செல்வராஜன் எழுதிய 'இல்லாமல் போன இன்பங்கள்' நூல் அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிழமை (25) காலை  மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாநகர சபையின் அனுசரணையுடன், செங்கதிர் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தொல்லியல் ஆய்வாளரும் செங்கதிர் இலக்கிய வட்டத்தின் தலைவருமான க.தங்ககேஸ்வரியின் தலைமை தாங்கினார்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணப்பாளர் க.பாஸ்கரன், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் த.சிவசுப்பிரமணியம் உட்பட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர், க.கிருபாகரனும் அறிமுக உரையை செங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணனும், நூலின் நயவுரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் ரூபி வெலன்ரீனா பிரான்ஸிஸ_ம் நிகழ்த்தினர்.

'இல்லாமல் போன இன்பங்கள்'  நூலின் சிறப்புப் பிரதிகளை, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயம், சட்டத்தரணி கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மக்கள் வங்கி முகாமையாளர் ச.சரவணபவன், பாவலர் சாந்தி முகைத்தின், புதுவை மா.சதாசிவம், மட்டக்களப்பு சென் ஜோன்ஸ் அம்பியுலான்ஸின் தலைவர் ஏ.எஸ்.மீராசாகிபு ஆகியோரும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.