மட்டு நகரில் பாரம்பரிய கலைகளின் சங்கமம் இந்துகலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி.சாந்திநாவுக்கரசன் அவர்களின் வழிகாட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நாவற்குடா இந்துக்கலாசார நிலையத்தில் ஆரம்பமானது.
இன்று தொடக்கம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறும்.
இதன் ஆரம்ப நிகழ்வுக்கு இந்துகலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ம.சண்முகநாதன் தலைமை தாங்கினார் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர்.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் சிறப்புவிருந்தினராக பேராசிரியர் எஸ்.மௌனகுரு, கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் பங்குபற்றினர்.
காலை நிகழ்வுகள் நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் இடம்பெற்று மாலை நான்கு மணிக்கு பின்னர் மாலை நிகழ்வுகள். முனைக்காடு ஆலயமுன்றல். புதுக்குடியிருப்பு கண்ணகை அம்மன் ஆலய முன்றல். ஆகிய இடங்களில் மாலை நிகழ்வாக இடம்பெறுகிறது.
கலைகளின்சங்கமமாக வந்தாறுமூலை நவரத்தினம் கலைக்குழுவின். மகிடிக்கூத்தும் கன்னன்குடா கதிரவன் கலைக்குழுவின் கரகம்> பருத்திச்சேனை கலைமகள் கலைக்கழகத்தின் தென்மோடிக்கூத்தும் முனைக்காடு நாகசக்திகலைக்குழுவினரதும் தேற்றாத்தீவு கிராமியகலைக்கழகத்தினரதும் வடமோடிகூத்தும்> வசந்தன்கூத்தும்> பொகவத்தலாவ மலையக கூத்தியல்கலைக்குழுவினரின் காமன்கூத்தும்> வாகரை ஆதிவாசிகளின் கலைக்குழுவினரின் வேடுவர்ஆட்டமும். பக்தநந்தனார்> ணுவில்கந்தசாமிகோவில் இளம்தொண்டர் சபையினரின் இசைநாடகமும் இடம்பெற்றது.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.