நேற்று வண்ணத்துப்பூச்சு சமாதான சிறுவர் பூங்காவினால் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்ட சாண்டோ சாகாச நிகழ்விலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சாண்டோக்கலையினை அழியாமல் காத்துவரும் சாண்டோ இராஜரட்னம் தனது உடலில் உழவு இயத்திரத்தினை 51 தடவைகள் ஏற்றி இந்த சாதணையினை படைத்துள்ளார்.
நேற்று இந்துக்கல்லூரி மைதானத்தில் சிறப்பான முறையில் சாகாச நிகழ்வுகள் நடைபெற்றன.
வண்ணத்துப்பூச்சு சமாதான சிறுவர் பூங்காவின் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சாண்டோ இராஜரட்னம் பல்வேறு தரப்பினராலும் கௌரவிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து மயிர்கூச்செறியும் பல்வேறு சாகசங்களை மைதானத்தில் நிகழ்த்தினார்.
இரும்புக்குண்டை உடலில் எறிந்து விளையாடியதுடன் மிகவும் தடித்த கம்பியை உடலில் வளைத்துக்காட்டினார்.அத்துடன் பாறை கற்களை தனது உடலில் ஏற்றி அவற்றினை சுத்தியலால் உடைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.இதேபோன்று இரும்புச்சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவற்றினை உடைத்தெறிதல்,கையினால் தேங்காய் உரித்தல்,ஓடும் காரினை இழுத்து நிறுத்துதல் உட்பட பல சாதனைகள் இங்கு படைக்கப்பட்டன.
இதன்போது பார்வையாளர்களின் பலத்த கரகோசத்துக்கு மத்தியில் உழவு இயந்திரங்களை 51 தடவைகள் தனது உடலில் உலக சாதணை படைத்தார்.
தமிழர்களின் பாரம்பரிய கலையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தனிச்சிறப்புமிக்க கலையாகவும் உள்ள சாண்டோக்கலை அருகிவரும் நிலையில் அவற்றினை பாதுகாக்கும் வகையில் சாண்டோ இராஜரட்னம் தனது பணியை மேற்கொண்டுவருகின்றார்.