இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மகிழூர்,நாகபுரம் பேக்கரி வீதியில் உள்ள வீட்டில் இருந்து செல்லத்தம்பி தங்கவேல்(68வயது)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த 35 வருடமாக குடும்பத்தினை பிரிந்து தனிமையில் இருந்துவந்ததாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இன்று பிற்பகல் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியான தியாகேஸ்வரன் ஸ்தலத்துக்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.