மட்டக்களப்பு வலயத்தில் 240 மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி-கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவர்கள் சாதனை

(லியோன்)    
                                                                                                                                                                     வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 240 மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளதாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி அ.சுகுமாரன் தெரிவித்தார்.


இணையத்தளங்களில் வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த சித்திகள் கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கோட்டத்தின் அடிப்படையில் மண்முனை வடக்கு கோட்டத்தில்   211 மாணவர்கள் ,  மண்முனை பற்று கோட்டத்தில்    22 மாணவர்களும் ,ஏறாவூர் பற்று கோட்டம் ஒன்றில்  7 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு  வலய கோட்ட பாடசாலைகளில் புனித மிக்கேல் கனிஸ்ட வித்தியாலயத்தில் 54 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் வலயத்தில் முதலாம் இடத்தினைப்பெற்றுள்ளனர்.

இரண்டாம் இடத்தினை கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயம் பெற்றுள்ளதுடன் அங்கு 32 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.  மூன்றாம் இடத்தினை வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை பெற்றுள்ளதுடன் அங்கு 29 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.  நான்காவது இடத்தை கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை  பெற்றுள்ளதுடன் 21 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.  ஐந்தாவது இடத்தை புனித சிசிலியா பெண்கள் கல்லூரி  பெற்றுள்ளதுடன் அங்கு 20 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஆறாவது இடத்தை மெதடிஸ்த மத்திய கல்லூரி பெற்றுள்ளதுடன் 14 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் .

மட்டக்களப்பு வலய மட்டத்தில் அதிகூடிய  188 புள்ளிகளை  பெற்று கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவர்களான பிரபாகரன் ஜனுசிகன் மற்றும் நாகேஸ்வரன் டிலுக்சனா ஆகிய இருவரும் சித்தியடைந்துள்ளனர் .

இவர்கள்  வலய மட்டத்தில் முதல் இடத்தினையும்  மாவட்ட மட்டத்தில் 4வது இடத்தினையும்  பெற்றுள்ளனர் .

கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு மட்டக்களப்பு வலய  கோட்ட மட்டத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.