புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 206வது வருடாந்தப் பெருவிழா சிறப்பாக நிறைவுற்றது

(லியோன் )

மட்டக்களப்பு அமிர்தகழி  புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின்  206வது வருடாந்தப் பெருவிழா இன்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த 19.09.2014 வெள்ளிக்கிழமை  மாலை  05.30 மணியளவில்  கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது .

திருவிழா நவநாள் காலங்களில் தினமும் மாலை 05.30மணிக்கு திருச்செபமாலை பிராத்தனையும் ,திருப்பலியும், மறையுரையும் இடம்பெற்றது .

27.09.2014 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திருப்புகழ் மாலை, நற்கருணை வழிபாடுகளும் இடம்பெற்றது .அதனை தொடர்ந்து அன்னையின் திருவுருவம் பவனியாக வழமையான வீதிகளின் ஊடக எடுத்துச்செல்லப்பட்டது .
                                                                         
28.09.2014 ஞாயிற்றுக்கிழமை  காலை 07.15மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா அவர்களின் தலைமையுடன் ,பங்கு தந்தை அருட்பணி  ஜூலியன் ,ஆயித்திய மலை பங்கு தந்தை டக்லஸ் ஜேம்ஸ் , அருட்தந்தை ஜீவன்  ஆகியோர் இனைந்து  திருவிழா திருப்பலியை  ஒப்புக்கொடுத்தனர் .
                                                                                 
இறுதியில்ஆலய திருவிழா  கொடியிறக்கப்பட்டு நிறைவிலே வழமைபோன்று அன்னதானம் பகிர்ந்தளிக்கப்பட்டு இறுதியில் ,அலங்கரிக்கப்பட்ட கப்பலிலே அன்னையின் திருவுருவம் மட்டக்களப்பு வாவியினூடாகப் பவனியாக கொண்டு செல்லப்பட்டது ,                                                                                                                                                            
இந்நிகழ்வு  ஒரு கண்கொள்ளாக் காட்சியாக திகழ்ந்தது .அதனை தொடர்ந்து பெருவிழா இனிதாக நிறைவுபெற்றது .