(லியோன்)
பாடசாலை மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் பாடசாலை மட்டத்தில் வருடந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் தொடர்பான சுகாதார பரிசோதனைகள் 26.09.2014 மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் அதிபர் எம் .யோகானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது .
இப்பரிசோதனை நிகழ்வில் தரம் .01,தரம் 04. தரம் 07, தரம் 10 ,ஆகிய மாணவர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்றது .
இம் மாணவர்களின் உயரம் ,நிறை பார்த்து உடல் திணிவுச் சுட்டி அறியப்பட்டு ஏ விட்டமின்களும் மற்றும் புழு நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டதுடன் , பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட மாணவர்களை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
இதனை சுகாதார வைத்திய அலுவலக வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டனர் .
இந்நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர் , மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொது சுகாதார பயிலுனர்கள் மற்றும் பாடசாலை சுகாதார குழு ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர் .