( லியோன் )
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலகத்தால் மாவட்ட மட்டத்தில் மேற்கொண்டு வரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயல் அமர்வு 25.09.2014 மட்டக்களப்பு மாவட்ட செயலக அனுசரணையுடன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரட்ணம் தலைமையில் களவாஞ்சிகுடி இராச மாணிக்கம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது .
இதில் களுவாஞ்சிகுடி உதவி பிரதேச செயலாளர் ,களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் ,மண்முனை தென் எருவில் பற்று மற்றும் போரதீவு பற்று ஆகிய செயலகங்களுக்கு உட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் . . இதில் சுமார் 50 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .
நடைபெற்ற செயல் அமர்வில் பேராசிரியர் .எஸ் . மௌனகுரு பயிற்சி வளவாளராக கலந்துகொண்டார், இங்கு முன்பிள்ளை பருவ அபிவிருத்தி கலை உணர்வு அபிவிருத்தி தொடர்பான நுண் உணர்வு அதிகரிப்பதற்கான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
இச்செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளரினால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது .