மட்டக்களப்பில் ஆறு வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற சாரணர் கலைக்கூறு பயிற்சி பட்டறை

சாரண தலைவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் கலைக்கூறு -02 பயிற்சி நிகழ்வானது புதிய பாடத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை ரீதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக நடத்தப்பட்டன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த பயிற்சி நெறி ஆறு வருடங்களுக்கு பின்னர் நடத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் பொ.ஆனந்தாராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட 36 தலைவர்கள் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நான்கு தினங்கள் கொண்டதாகவும் வதிவிடத்துடன் கூடியதாகவும் நடத்தப்பட்ட இந்த பயிற்சி நெறியில் கொழும் சாரண தலைமையக உதவி ஆணையாளர் எஸ்.சௌந்தரராஜன்,தலைமையக பயிற்சி ஆணையாளர் சரத்கொடக்கந்த ஆராச்சி,முன்னாள் பயிற்சி ஆணையாளர் எம்.இ.எஸ்.ஜயசிங்க,சிறிசேன டி சில்வா.திருமதி ஜயக்கொடி,செல்வி சி.பெர்னாண்டோ ஆகியோர் பயிற்சி ஆலோசகர்களாக கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த சாரண பயிற்றுவிப்பாளர்களான எஸ்.ஆலோசியஸ்,ஆர்.பாஸ்கர்,ஏ.உதயகுமார்,ரி.ஆலோசியஸ் ஆகியோரும் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

இந்த நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் பொ.ஆனந்தராஜா மற்றும் ஏ.புட்கரன் ஆகியோர் ஒழுக்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.