நேற்று வியாழக்கிழமை மாலை பெரியகல்லாறு, ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யப்பட்டு அம்பாளின் பூசைப்பொருட்கள் ஊர்வலமாக கொண்டுகொண்டுசெல்லப்பட்டு இறவுதிருக்கதவு திறக்கப்பட்டது.
பெருமளவான அடியார்கள் புடை சூழ அம்பாள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு இந்த திருக்கதவு திறத்தல் சிறப்பாக நடைபெற்றது.
மிகவும் அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தின் வருடாந்த சக்தி விழாவானது ஏழு தினங்கள் நடைபெறவுள்ளதுடன் தினமும் காலை மதியம் இரவு பூசைகள் நடைபெறும்.
விசேட கிரியாகால குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ஏ.குமாரலிங்கம் குருக்களின் தலைமையில் ஆலய நித்திய குரு த.தவராசா பூசகர் மற்றும் உதவி பூசகர்களினால் திருச்சடங்கு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து வாழைக்காய் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறவுள்ளது.அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை சப்புரத்திருவிழா நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை(30ஆம் திகதி)காலை நோர்ப்பு நெல் குற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் பிற்பகல் 11.00மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த யாகம் நடத்தப்படவுள்ளது.இந்த யாகம் நோய்களை,பிணிகளை தீர்க்கும் சக்தி வாய்ந்தது என விசேட கிரியாகால குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ஏ.குமாரலிங்கம் குருக்கள் தெரிவித்தார்.
அன்று பிற்பகல் 3.00மணியளவில் அன்னையின் நோற்புக்கட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் அன்று மாலை கடல்குளிப்பு நிகழ்வு நடைபெறும்.
இறுதி நாளான புதன்கிழமை காலை 7.00மணியளவில் சக்தி பூஜையின் விசேட நிகழ்வாகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகவும் உள்ள தீமிப்பு உற்சவம் நடைபெறும.