மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் முசம்மில் காலமானார்

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

மூத்த ஊடகவியலாளரும்  ஓய்வு  பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான  கலாபூசணம்  அல் -ஹாஜ் அலியார் முசம்மில்  இன்று  கொழும்பில் காலமானார் .


1942.11.18 ஆந்  திகதி பிறந்த இவர்  சாய்ந்தமருது  அலியார்   - முக்குலுத்தும்மா  தம்பதிகளின் புதல்வராவார் .

நாளை தனது மனைவியுடன் புனித ஹஜ் கடமைக்காக மக்கா செல்ல கொழும்பில் தங்கியிருந்த போது சுகயீனம் ஏற்பட்டு  டெல்மன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது மரணமானார்.

இவரது மரண செய்தி கேட்டு  அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.