வின்சன்ட் தேசிய பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 194 வது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 194 வது ஆண்டு நிறைவு இன்று கல்லூரியின் அதிபர் திருமதி.ஆர்.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இன்று காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வுகளும், காலை 08.00 மணிக்கு புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்தில் விசேட ஆராதனையும்நடைபெற்று பாடசாலையில் 09.30 மணிக்கு பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு பாடசாலை தினம் ஆரம்பமானது.
அத்துடன் 194வது ஆண்டினை குறிக்கும் வகையில் மாணவிகளின் விழிப்புணர்வு பவணியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்வியியலாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.