(விசேட நிருபர்)
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை 25.09.2014 நண்பகல் ஒரு மணியளவில் விபத்து சம்பவித்தது.
ஏறாவூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பிக்கப்ப வாகனம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரி மீதும், வீதியருகே இருந்த தொலைபேசிக் கம்பம் மற்றும் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் மோதி சேதமேற்படுத்தியுள்ளது.
விபத்தில் பாதசாரியான ஏறாவூர் கிராம நீதிமன்ற வீதியைச் சேர்ந்த முதியவர் எம். ஹயாத்துமுஹம்மது (வயது 76) என்பவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.