வரலாற்று பாரம்பரியங்களை பேணும் வகையில் ஓவிங்களை வரையும் செயற்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று பாரம்பரியங்களை பேணும் வகையிலும் சுற்றுலாப்பயணிகள், மற்றுமு; வேறு இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் ஓவிங்களை வரையும் செயற்திட்டம் ஒன்று மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை முதல் மட்டக்களப்பு இந்து இளைஞர் சேவைகள் மன்றக் கட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வில், மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன், கலாசார உத்தியோகத்தர் எஸ்.எம்.ஜெயினுலாப்தீன், மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஓவியர்கள் இன்றைய தினம் ஓவியங்களை வரைந்தனர். இவற்றில் பிரதேச காட்சிகள், வரலாற்றைக் காண்பிக்கும் ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள் எனப் பல ஓவியங்கள் ஓவியர்களால் வரையப்பட்டன.

இவ் ஓவியங்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.