அமரர் டீ.எஸ்.கே வணசிங்க அவர்களது மறைவின் 25வது ஆண்டு நினைவு தினம்

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் முன்னாள் பிரதித் தலைவருமான டீ.எஸ்.கே.வணசிங்க அவர்கள் மறைந்து 25வது ஆண்டு நிறைவு நாள் எதிர்வரும் 31.03.2014 ஆகும்.

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள அமரர் வணசிங்க நினைவுப் பணிச்சபை அது தொடர்பாக நினைவுமலர் ஒன்றினை வெளியிடும் முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

எனவே அன்னாரைப் பற்றிய தகவல்கள் மற்றும் அவரது கல்வி, சமூக, தொழிற் சங்கப் பணிகள் குறித்த விபரங்களை அறிந்தவர்கள் பின்வரும் முகவரிக்கு அவ் விபரங்களை உடன் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பொதுச் செயலாளர்
அமரர் டீ.எஸ்.கே வணசிங்க நினைவுப் பணிச் சபை
இல, 50 லேடி மனிங் டிறைவ்
மட்டக்களப்பு