மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் வலயத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறப்பாக செயற்பட்ட அதிபர் ஆசிரியர்கள்,மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கல்விக்கு அளப்பெரிய சேவையாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் மனோகரன்,மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.