நிதி அமைச்சின் வழிகாட்டல் மற்றும் வேண்டுகோளில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட மாநில அபிவிருத்தி அறிக்கை 2012 தொடர்பான பிராந்தியக் கலந்துரையாடல் நேற்யை தினம் செவ்வாய்க்கிழமை பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான பிரதி பிரதிநிதி லொவிரா ரம்குற்றே, உதவி பிரதிநிதி ஆர்.கணேசராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் திணைக்களத் தலைவர்கள், கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகம், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய நிலை, தேவைகளை இனங்காணுதல், அவற்றிலிருந்து மாவட்டத்தின் குறிகாட்டிகளை மேம்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் ஆராயப்பட்டன.
மாநில அபிவிருத்திக்கான பிராந்திய வேற்றுமைகளை நீக்குதல் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை இலங்கை கொள்கைகள் கற்றைகள் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு;ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




