மட்டக்களப்பு மக்கள் வங்கியின் சீட்டிலுப்பு மூலம் வெற்றி பெற்ற மகளிருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு

(துசி)

வனிதா வாசனா கணக்கின் சீட்டிலுப்பு மூலம் வெற்றி பெற்ற மகளிருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மக்கள் வங்கிக் கிளையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக ஈஸ்டன் இன்டர் நஸனல் பாடசாலையின் முகாமை இயக்குனர் திருமதி தனுஜா மௌலானா அவர்களும் மற்றும் மக்கள் வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அப்துல் அசீஸ் மற்றும் உதவி பிராந்திய முகாமையாளர் ஜனாப் உசைன் ஜெய்சித் மற்றும் ஈஸ்டன் இன்டர்நஸனல் பாடசாலையின் பணிப்பாளர் ராகுலன் ஆகியோருடன் மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள்  ஈஸ்டன் இன்டர் நஸனல் பாடசாலையின் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வனிதா வாசனா கணக்கு சீட்டிலுப்பு திட்டத்தில் குலுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூவருக்கு முறைய ரூபா 100000 ரூபா 5000 ரூபா 5000 பணப்பரிசில் வழங்கப்பட்டது அத்துடன் புதிதாக மகளிருக்கான வைப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஈஸ்டன் இன்டர்நஸனல் பாடசாலையின் மாணவர்களால் பாடல் நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.