வவுனதீவில் விஞ்ஞான தொழிநுட்ப வளநிலைய ஆக்கத்திறன் கண்காட்சியும் விற்பனையும்

(தனு)

மண்முனை மேற்குப் பிரதேச செயலக விஞ்ஞான தொழிநுட்ப வளநிலைய ஆக்கத்திறன் கண்காட்சியும் விற்பனையும் இன்று புதன்கிழமை (04) பிரதேச செயலக மண்டபத்தில் திறந்துவைக்கப்பட்டது.
மண்முனை மேற்குப் பிரதேச விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகஸ்தர் திருமதி சுமித்தா அகிலன் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியினை மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், வை.எம்.சீ.ஏ.அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக் கண்காட்சியில் விஞ்ஞான தொழிநுட்ப வளநிலையத்தினால் வழங்கப்பட்ட பயிற்சியினைப் பூர்த்தி செய்தவர்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

பனை, தென்னை, பன், மட்பாண்டம், கடதாசி மற்றும் கழிவுப் பொருட்களில் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களே இவ்வாறு கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைககப்பட்டுள்ளது.