மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக கலாசார விழா நேற்றைய தினம், கித்துள் சிறி கிருஸ்ணா வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் ஊ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உதவி மாவட்டச் செயலாளர் ஆர்.ரங்கநாதன், கித்துள் சிறி கிருஸ்ணா வித்தியாலய அதிபர், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், கரடியனாறு, ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ண மிசன் தலைவர் சதுர்புஜானந்த ஜீ மகாராஜ், ஏறாவூர் பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், கித்துள் சிறி கிருஸ்ணா வித்தியாலய, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவிகளின் நடன, கலை நிகழ:வுகளுமு; இடம் பெற்றன.
கலாசார விழாவின் முக்கிய அம்சமான நானிலம் மலர் வெளியீட்டினை கலாசார உத்தியோகத்தர் எம் சிவானந்தராஜா- கலாசாரப் பேரவைத் தலைவரும், பிரதேச செயலாளருமான உ.உதயசிறிதரிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.
நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.
அதனையடுத்து, கலாசாரப் பேரவையினால் 11 கலைஞர்கள் விபுலம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.