அகில இலங்கை சமாதான நீதவானாக நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் சத்தியப்பிரமாணம்.

மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை அகில இலங்கை சமாதான நீதவானாக நீதவான் அப்துல்லா முன்நிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த நான்கு வருடங்களாக நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபராகப் பணிபுரியும் இவர் இந்தப்பாடசாலையில் 20 வருடங்களுக்குப்பின்பு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடையவும், ஐந்து வீதத்திலிருந்த கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றை 65 சதவீதமாக உயர்த்தவும், உயர்தரப்பரீட்சையில் கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லவும் காரணமாக இருந்தவர்.
அதே நேரம் சிறந்த ஆசிரியர்களுக்காக ஜனாதிபதியால் வழங்கப்படும் பிரதீபா பிரபா விருதினை தொடர்ச்சியாக கடந்த 3 ஆண்டுகளாக பெற்றுக்' கொண்ட பெருமையும் இவருக்கு ண்டு.

வவுணதீவு பிரதேசத்தின் விளாவட்டுவான் கிராமத்தைச் சேர்ந்த இவர், மட் சிவானந்தா தேசியப்பாடசாலையின் பழையமாணவராவார்.

அத்துடன் மட்டக்களப்பு நீதி நிருவாக வலயத்துக்குட்பட்ட சமாதான நீதவானாக கடந்த 13 வருடங்களாக செயற்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.