கையெழுத்துச் சஞ்சிகைப் போட்டி பாலர் பிரிவில் நாவற்காடு நாமகள் முதலிடம்

பாடசாலைகளுக்கிடையிலான கையெழுத்துச் சஞ்சிகைப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குக்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலய பாலர் பிரிவு மாகாண மட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

 பாடசாலைகளுக்கிடையில் மாகாண மட்டத்தில் 2012ஆம்ஆண்டுக்கான கையெழுத்துச் சஞ்சிகைப் போட்டி 5 பிரிவுகளில்  நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயங்களிலிருந்தும் இப்போட்டிக்கான சஞ்சிகைகள் தெரிவு இடம் பெற்றிருந்தது. ஆரம்பத்தில், வலய மட்டத்திலும் பின்னர் மாகாண மட்டத்திலும் இப்போட்டி இரு தொகுதிகளாக இடம்பெற்றன.

நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தால்  மட்டக்களப்பு மேற்கு வலய மட்டத்தில் இப்போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 5 பிரிவுகளுக்குமான சஞ்சிகைகளில் மேல் பிரிவு முதலாமிடத்தினையும், ஏனையவை இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொண்ட அதே வேளை மாகாண மட்டத்தில் பாலர் பிரிவு முதலாமிடத்தினையும், மேற்பிரிவு மூன்றாம் இடத்தினையும் பெற்றன.

அத்தோடு இப்பாடசாலையின் மூலம் நாவல் ஊற்று எனும் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட இச் சஞ்சிகைகள் மட்டுமே மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் சார்பில் பரிசு பெற்றுக்கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சஞ்சிகைகளுக்கான ஆலோசனை வழிகாட்டல்களை ஆரம்ப பிரிவு தலைவர் ஏ.சி.பிரான்சிஸ் மற்றும் ஆசிரியர்களான திருமதி ஆர்.ரவீந்திரன், திருமதி ஆர் சத்தியகீர்த்தி ஆகியோர் வழங்கியிருந்தமைக்கு அதிபர் த.கோபாலப்பிள்னை பாராட்டுக்களையும் தெரவித்துள்ளார்.