வீதி விபத்தில் பாடசாலை மாணவி பலியானது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சாரதி தடுத்துவைப்பு

(தவக்குமார்)

மட்டக்;களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையடி வட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வாகன சாரதி தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பாலையடிவட்டையைச் சேர்ந்த யோகநாதன்-பகீர்தினி என்ற மாணவி உயிரிழந்தார். இவர் 37 நவகிரி வித்தியாலத்தில் தரம்-3 இல் கல்வி கற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 3ம் தவணைப்பரீட்சையை முடித்து விட்டு தனது வீடு திரும்பும் வழியில் வைக்கேல கிரமத்திலிருந்து வேகமாக வந்த பால் கொள்வனவு செய்யும் மோதியதால் குறித்த மாணவி உயிரிழந்திருந்தார்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.