கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்ற இவ்விழாவில், கிரிக்கட், உதைபந்துப் போட்டிகளில் கிழக்கு மாகாண விளையாட்டு உத்தியோகத்தர்களின் அணி வெற்றி பெற்றது.
இவ்விளையாட்டு விழா இறுதி நிகழ்வில், மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர், ஊவா மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நாவலப்பிட்டி நகர சபை முதல்வர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணக்குழு கிழக்கு மாகாணப்பணிப்பாளர் எஸ்.மதிவண்ணன் தலைமையில் இவ்விளையாட்டு விழாவில் பங்கு பற்றியிருந்தது.
உதைபந்தாட்டப் போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரனும், கிரிக்கட் அணிக்கு திருமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.விஜயநிதனும் தலைமை தாங்கியிருந்தனர்.
இவ்விளையாட்டு விழாவில், தடகள மெய்வல்லுனர், கிரிக்கட், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், உதை பந்தாட்டம், கயிறு இழுத்தல் உள்ளடங்கலாக அனைத்துப் போட்டிகளும் அடங்கியிருந்தன.
இவ் விளையாட்டு விழாவில் தென்மாகாணம் முதலிடத்தினைப் பெற்றுக் கொண்டதுடன், ஏனைய மாகாணங்கள் முறையே மேல்மாகாணம், சப்பிரகமுவ, வடமேல் மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம், வடமாகாணம் ஆகியன அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டன.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)