நாவற்குடாவில் இடம்பெற்ற விபத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நூர்தீன் படுகாயம்

மட்டக்களப்பின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும் எமது மட்டு நியூஸ் செய்தியாளருமான காத்தான்குடியினை சேர்ந்த எம்.எஸ்.எம்.நூர்தீன் இன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது கல்லடி நாவற்குடாவில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக மாடு ஒன்று குறுக்காக பாய்ந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த ஊடகவியலாளர் காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் ஊடகவியலாளரை மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தினை சேர்ந்தவர்கள் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.

அத்துடன் ஊடகவியலாளர்கள்,அரசியல்வாதிகள் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிவருகின்றனர்.