மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (24.11.2013) கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் பயிற்சிக்காக மரத்தினால் செய்யப்பட்ட போலியான கைக்குண்டு என மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள கொக்குவில் இந்து மயானத்தில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று கிடப்பதை பொலிசார் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வருகை தந்த விஷேட குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் அதை ஆராய்ந்த போது பயிற்சிக்காக மரத்தினால் செய்யப்பட்ட போலியான கைக்குண்டு என தெரிவித்ததாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)