வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேசிய கண்காட்சியில் தெரிவு செய்யப்பட்ட 575 பேரில் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான முழுநேரப்பயிற்சிகள் இன்று ஆரம்பமாகின.
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் பகல் நடைபெற்ற இப் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், ஆர்.கங்காதரன், மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உத்தீயோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்தப்பயிற்சி நெறியில், ஏறாவூர் நகரம், ஏறாவூர் பற்று கோரளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த சிறிய தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதேநேரம் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களுக்கு வாழைச்சேனை கறுவாக்கேணி சமூக அபிவிருத்தி நிலையத்தில் மற்றொரு தொகுதியினருக்கு பயிற்சிகள் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதில் கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரீவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பெறுவர். அமைச்சினால் 575 பேரில் 90 பேர் மாத்திரமேதெரிவு செய்யப்பட்டுளனர். இந்தப்பயனாளிகளுக்கான தொழில் உபகரங்கள் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் சிபார்சுடன் பொருளாதார அமைச்சினால் மாவட்ட செயலகத்திற்கு விரைவில் அனுப்பிவைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ள்து.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)