ஏறாவூர் பற்று கலாசார பேரவையின் ஏற்பாட்டில் கூத்து நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைவாக ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கூத்து நிகழ்வு களுவன்கேணி ஸ்ரீ பத்தினி அம்மன் ஆலய முன்றலில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவானந்தராஜா தலைமையில்  இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

அருகி வரும் கிராமிய கூத்து மற்றும் பாரம்பரிய கலைகளையும் பேணிப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவானந்தராஜா  இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பிரதேச கலைஞர்களும் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.