கன்னங்குடா கண்ணகியம்மன் ஆலயத்துக்கான மின்பிரப்பாக்கி மற்றும் கன்னங்குடா சிலம்புச் செல்வி முதியோர் சங்கத்திற்கு கதிரைகள் மாகாணசபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இவற்றினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் ஆலய தலைவர் விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்தார்.
கடந்த காலத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.