மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயத்துக்கு அருகில் உள்ள மூன்று கடைகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடை விற்பனை நிலையம் ஒன்றும் இலத்திரனியல் விற்பனை நிலையம் மற்றும் அச்சகம் ஆகிய மூன்று வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கொள்ளையிடப்பட்டுச்செல்லப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்களினால் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)