காணி தொடர்பான பிரச்சினைகளை சமர்ப்பிக்குமாறு அரியநேத்திரன் எம்.பி.கோரிக்கை

ஆரையம்பதி காணிப்பிரச்சினைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அமைக்கப்பட்ட அரச அதிபர் தலைமையிலான குழுவிடம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், நிலப்பயன்பாட்டு உதவி ஆணையாளர், நில அளவைகள் திணைக்கள அத்தியட்சகர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

எனவே ஆரையம்பதி தமிழ் மக்கள் தங்களது முறைப்பாடுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும்.

குறித்த முறைப்பாடுகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.