மயிலம்பாவெளி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலய வகுப்பறை கட்டிட திறப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வு

(பேரின்பராஜா சபேஸ்)

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலய வகுப்பறை கட்டிட திறப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை அதிபர் க.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், உதவக் கல்விப்பணிப்பாளர் த.யோகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் கல்வி மற்றும் கல்விசாரா நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுகம்  கௌரவிக்கப்பட்டனர் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய "மயூரம்" நூல் வெளியீடும் இடம்பெற்றது.