நிந்தவூரில் விஷேட பாதுகாப்புக் கூட்டம்

அண்மைக்காலமாக நிந்தவூரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக  ஏற்பட்டிருக்கும் நிலைமையினைக் கருதிற்கொண்டு நேற்றைய தினம் விஷேட பாதுகாப்புக் கூட்டம் நிந்தவூர்  ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

 மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுப்   பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. இந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹகெதர, கல்முனை பொலிஸ் தலைமையக  பொறுப்பதிகாரி ஏ.டப்லிவ். கபார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. தஹனாயக மற்றும் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிந்தவூரின் பாதுகாப்பு நலன் கருதி நிந்தவூரை 8 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு பிரதான நுழைவாயில்களிலும் பொலிஸார் கடமையிலிருந்து வாகன நடமாட்டங்களை அவதானிப்பதோடு, பாதுகாப்பு நலன் கருதி இரவு வேளைகளில் பொலிசாரின் 4 வாகனங்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதோடு, ஊரின் பிரதான சந்திகளில் பொலிஸ் குறிப்பு புத்தகம் நடைமுறையில் பேணப்படும் என்றும் இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நிந்தவூர்  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.ஏ.எம். றசீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை இனறு முதல் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென்றும், மேலும் மோட்டார் சைக்கிள்களை நீதிமன்றத்தின் மூலம் அடையாளங்களை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.