கல்முனையின் புதிய மேயர் முதுமாணி எம். நிஸாம் காரியப்பர் தலைமையிலான முதலாவது சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை மாலை மாநகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் பிரதி மேயர் சிராஸ் மீராஸாஹிப் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஏ.எம்.நபார் ஆகியோர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு புதிய மேயருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று தமது கடமைகளை மேற்கொள்ள போவதாக புதிய மேயர் தனது கன்னி உரையில் தெரிவித்தார்.
உறுப்பினர்கள் அனைவரும் திறந்த வெளிப்படை தன்மையுடன் பணியாற்றுவதன் ஊடாக சிறந்த நல்லாட்சியையும் சிறந்த கட்டமைப்பை உருவாக்குவோம். மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் கண்ட கல்முனை மாதிரி நகர அபிவிருத்திக் கனவை நினைவாக்குவோம் எனக் கூறியதுடன் அதற்கான மாதிரி வரைபடத்தையும் சபையில் சமர்ப்பித்து அவர் சமர்ப்பித்தார். இந்த அமர்வில் அடுத்த ஆண்டிற்கான நிதிக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பாக ஆராயப்பட்டது.