இன்று சனிக்கிழமை காலை ஊறணிச்சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பால் ஏற்றிச்சென்ற வாகனத்துடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாகவந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியதன் காரணமாக இதன்போது மோட்டார் சைக்கிளில் பயனம் செய்த கொக்குவிலை சேர்ந்த 19வயது இளைஞனும் 8 வயது சிறுவனும் படுகாயமடைந்துள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த 19வயது இளைஞன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வயது சிறுவனும் கால்கள் இரண்டும் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகினர்.
துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு தனது மகளை ஏற்றிச்சென்றுகொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதால் இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
