ஏறாவூர் பற்று பிரதேசத்துக்குட்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களைக்கொண்டுள்ள வந்தாறுமூலை அகிலன் விசேட தேவையுடைய பாடசாலையின் மாணவர்களின் கலை நிகழ்வு நேற்று நடைபெற்றது.
லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் நிதியுதவியில் இலங்கை அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் வந்தாறுமுலை அகிலன் விசேட தேவையுடையோர் நிலையத்தின் கலாச்சார நிகழ்வு திட்ட இணைப்பாளர் கே.டி சுதாகரன் தலைமையில் நேற்று மட்டக்களப்பு வந்தறுமுலை விஸ்னு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக லண்டன் அகிலன் பவுண்டேசனின் நிறுவுனர் மு.கோபாலப்பிள்ளை அவர்களும் மற்றும் சிறப்பு அதிதிகளாக அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா,பாக்கியசோதி அரியநேத்திரன் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா துரைரெட்ணம் மற்றும் துரைராஜசிங்கம் மற்றும் இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் செயோன் ஆகியோரும் மற்றும் அகிலன் விசேட தேவையுடையோர் நிலையத்தின் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது விசேட தேவையுடைய மாணவர்களின் பல கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.