புனித மைக்கேல் கல்லூரி மாணவனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு சென்தோமஸ் கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் யூஜின் டிலக்சனின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் துளியுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கொழும்பு சென்தோமஸ்கல்லூரிக்கும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருந்த க்ரோதர் சலன்ஞ் வெற்றிக்கிண்ணத்துக்கான (பிக் மச்) கூடைப்பந்தாட்டப் போட்டிக்காகச்சென்ற யூஜின் டிலக்சன் (15) கடந்த வெள்ளிக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
இவரின் சடலம் மட்;டக்களப்பு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் அவரது கல்லூரியான புனித மைக்கேல் கல்லூரிக்கு அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது.
பாடசாலைக்கு வந்த மாணவனின் சடலத்தினை பாடசாலை ஆசிரியர் அருட்தந்தை ரஜீவன் அடிகளாரும் பாடசாலை அதிபர் திருமதி மாசிலாமணியும் பாடசாலை கொடியினை பூதவுடலின்பேழையில் போர்த்தி பேழையை பொறுப்பேற்றனர்.
மாணவர்கள் மரியாதையுடன் பாண்ட் வாத்தியங்களுடன் பேழை பாடசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உள்ளக அரங்கில் மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மாணவர்கள்,அதிபர்,ஆசிரியர்கள் மலரஞ்சலி செலுத்தி பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதன்போது மாணவர்கள்,ஆசிரியர்கள் கதறியழுததன்; காரணமாக புனித மைக்கேல் கல்லூரியே சோகத்தில் மூழ்கியது.இதன்போது மாணவனின் இழப்பு தொடர்பிலான இரங்கல் உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பூதவுடல் புளியந்தீவு அன்னை மரியாள் பேராலயத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு ஆத்மசாந்தி பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டது.
இறுதியாக ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் துளிகளுடன் மட்டக்களப்பு,கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.