ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 68வது ஆண்டு நிறைவினையும் ஜனாதிபதியாக பதவியேற்ற தினத்தினை முன்னிட்டும் நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கு மாகாணத்தின் வரலாற்று பிரசித்திபெற்ற களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் நல் ஆசிவேண்டி விசேட பூசை நடத்தப்பட்டது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகமும் பிரதேச மக்களும் இணைந் இந்த பூசைகளை நடாத்தினர்.
களுதாவளை பிள்ளையார் ஆலய தலைவர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த பூசையில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன் கலந்துகொண்டார்.
இதன்போது சிறப்பு பூசைகள் நடைபெற்றதுடன் ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் நல்லாசிவேண்டி பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.
இதன்போது பிரதேசத்தில் இருந்து பெருமளவான பொதுமக்களும் பிரதேச செயலக அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.