காணி பிரச்சினை தொடர்பில் ஆரையம்பதியின் வதிவிடப்பிரதிநிதிகளையும் அழைத்த பேச வேண்டும் என கோரிக்கை

ஆரையம்பதி ஆலயங்களின் ஒன்றியத்தினால் மட்டு. அரச அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசரக் கடிதத்தில் ஆரையம்பதி அரச மற்றும் தனியார் காணிகளில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரம் அத்து மீறிய நில ஆக்கரமிப்பு தொடர்பான கலந்தரையாடலுக்கு அரசியல் தலைமைகளக்கு அப்பால் ஆரையம்பதியின் வதிவிடப்பிரதிநிதிகளையும் அழைத்த பேச வேண்டும் என ஆரையம்பதி ஆலயங்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவர்களால் அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சாள்ஸ், அவர்களுக்கு அனுப்பப்ட்ட கடிதம் வருமாறு

ஆரையம்பதி பிரதேசம் 12 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட சுமார் இருபதாயிரம் சனத்தொகைக்கு மேலுள்ள போதும் எமது பகுதிக்கு ஒரு பொது மயானமே உள்ளது.

இம் மயானத்தில் இந்து, கிறிஸ்தவம் என வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும்போது திட்டமிட்டு காத்ததான்குடியின் சில குழுக்களால் அடாவடித்தனமாக பிடிக்கப்பட்டு வருகின்றது. பொது மயானம் - கடற்கரை வரையான காணி எமது தமிழர்களின் காணியும் அரச காணியுமே ஆகும். இதுவே வரலாறு.

ஆனால் போலி ஆவணங்கள் மூலம் தமது காணி என காத்தான்குடி அரசியல் தலைமைகள் திட்டமிட்டு இன முறுகலை ஏற்படுத்த முற்படுவது வேதனைக்குரியது.

ஆகவே தேச வளமைச் சட்டத்திற்கு அமைய எமது பூர்வீக காணிகளில் எமது பொது மயானத்தின் பாவணைக்காக இப்பகுதியிலுள்ள அனைத்து காணிகளையும் எந்தத் தடையும் இன்றி பிரேதம் அடக்கம் செய்ய ஆவன செய்யுமாறு தங்களிடம் அன்பான வேண்டுகோளினை விடுத்து எமது கையொப்ப பிரதிகளை அனுப்பிவைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.