மண்முனைப்பற்றில் க.பொ.த (சா/த) முன்னோடிக் கல்விக் கருத்தரங்குகள்

ஆற்றல் பேரவையின் ஏற்பாட்டில் 2013ம் வருடம் க.பொ.த (சா/தர)ப் பரீட்சைகள் தோற்றவிருக்கும் மாணவ மாணவியர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு மண்முனைப் பற்று பிரதெசத்தின் ஆரையம்பதி இ.கி.மி. தமிழ் கலவன் பாடசாலையிலும், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய பாடசாலையிலும் நடத்தப்பட்டது.

ஆரையம்பதி, தாளங்குடா, மாவிலங்கதுறைப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆரையம்பதி இ.கி.மிசன் பாடசாலையிலும் கிராண்குளம் புதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்திலும் நடத்தப்பட்டது.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஆற்றல் பேரவையின் தலைவருமான பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இம்முன்னோடி கல்விக் கருத்தரங்கிற்கு விஞ்ஞான வளவாளராக பு.பத்மநாதன்,கணித வளவாளராக மு.நவரெட்ணமும் கலந்து கொண்டனர்.

இம்முறை மண்முனைப்பற்று பிரதேசத்தில் ஆரையம்பதி மகா வித்தியாலயம், ஆரையம்பதி இ.கி.மி. தமிழ் கலவன் பாடசாலை, தாளங்குடா விநாயகர் வித்தியாலயம், புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயம், கிராண்குளம் விநாயகர் வித்தியாலயம் அடங்கலாக சுமார் 350க்கு மேற்பட்ட மாணவர்கள் தோற்ற விருப்பம் குறிப்பிடத்தக்கது.