அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக காணாமல்போன இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டானை சுனாமி வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த இந்திரன் றமேஷ் (19 வயது) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ம் திகதி இளைஞனின் தந்தை, அவரைக் கண்டித்ததாகவும் இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவ்விளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மதியம் அப்பகுதியில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்பட்டதை அவதானித்த மாடு மேய்ப்பவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற திருக்கோவில் பொலிஸார், இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


