மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக பெண்களின் கூட்டணியினால் உருவாக்கப்பட்டுள்ள குறுந்திரைப்படம் ஒன்று மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ளது.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவிகள் முதன் முதலாக இந்த சாதனையினை மட்டக்களப்பில் படைத்துள்ளனர்.
திறி மூன் பிரசன்ட் வழங்கும் தேனுஜா,வேணுகா,பிரணிதா ஆகியோர் இணைந்து “மொபைலா,மொபைலா| என்ற நாமத்துடன் இந்த குறும்படத்தினை தயாரித்துள்ளனர்.இந்த குறும்படத்துக்கு சஞ்சித் லக்ஸ்மன் இசையமைத்துள்ளார்.
இந்த குறும்பத்தின் வெளியீட்டு விழா எதிர்வரும் 03ஆம் திகதி காலை 8.00மணியளவில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான மேலும் பல தகவல்களை எமது மட்டு நியுஸ் இணையத்தளத்தில் எதிர்பாருங்கள்.



