மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கௌரவிப்பு நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு   மெதடிஸ்த  மத்திய  கல்லூரியில் 2012ஆம்  ஆண்டில்  பல்கலைக் கழக  அனுமதி பெற்ற  மாணவர்களுக்கான  கௌரவிப்பும் , கேடயம்  மற்றும்  சான்றிதழ்  வழங்கும் நிகழ்வும்  , இன்று  மத்திய கல்லூரியின்  அதிபர்  ஐ  .கமலராஜா  தலைமையில்   இக்  கல்லூரியின்  பழையமாணவ  சங்க  உறுப்பினர்களால்  ஒழுங்கு  செய்யப்பட்டிருந்தது .
இப்  பாடசாலையானது   2014ஆம் ஆண்டு  தனது 200வது  வருடத்தை  நிறைவு  செய்யும்  இலங்கையின்  முதலாவது  பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது . 

இன் நிகழ்வுக்கு  விசேட அதிதிகளாக  வருகை தந்த  இக் கல்லூரியில்  கற்று  உயர்  நிலை  பதவிகளை    வகிக்கும்  பழையமாணவர்களான ,கிழக்கு பல்கலை கழக  விரிவுரையாளரும்,  மட்டக்களப்பு போதன வைத்தியசாலை வைத்திய கலாநிதி  ஆர் .ராஜவர்மண் ,  கட்டிட பொறியியலாளர்  தமிழ்வாணன் , கல்குடா வலயக்கல்வி  கணக்காய்வாளர்  டி சபேசன் , மற்றும்  அம்கோர்  நிறுவன    தலைமை  அதிகாரியும், பழைய மாணவ சங்க  பிரதி  தலைவருமான  ப . முரளிதரன், பொறியியலாளரும் ,  பழைய  மாணவ  சங்க பொது  செயலாளரும் , டெலிகாம் பிராந்திய முகமையாளருமான  வை .கோபிநாத்   அவர்களும்  கலந்துகொண்டனர் .

இவர்கள்  மாணவர்களால்  மலர் மாலை  அணிவித்து  அழைத்து  வரப்பட்டு , மங்கள  விளக்கேற்றப்பட்டு  நிகழ்வு ஆரம்பமானது .

இந் நிகழ்வில்  தலைமை  உரை ஆற்றிய கல்லூரி  அதிபர்  ஐ . கமலராஜா  அவர்கள்  2014 ஆம்  ஆண்டு  பல்கலைக் கழக  அனுமதியை  எதிர் பார்த்திருக்கும்  மாணவர்களின் கல்வியின்   முக்கியத்தையும்  அதற்கு  பெற்றோரின்  பங்களிப்பும்  எவ்வாறு  அமைய வேண்டும்  என்பதை  எடுத்துரைத்தார் . 

அதே போன்று  நிகழ்வுக்கு  வருகை  தந்திருந்த  அதிதிகளும் உரைகளிலே தாங்கள்  இக் கல்லூரியில்  கற்ற விதம் , தாங்கள்  இந்த  உயர் நிலைக்கு  வர  காரணமாக  இருந்த  ஆசிரியர்கள் , தங்களது  பெற்றோரின்  பங்களிப்பு ,  தாங்கள் கல்விக்கு  கொடுத்த முக்கியத்துவம்  பற்றிய   நீண்ட  விளக்கங்களை  மாணவர்களுக்கு  கூறியதோடு, இக் கல்லூரியில்  கல்வி கற்கும்  மாணவர்களுக்கு  தங்களது  கல்விக்குரிய  முழுமையான  பங்களிப்பை  தருவதாக  கூறிக்கொண்டார்கள் .

இந் நிகழ்வில்  பல்கலைக் கழக  அனுமதி பெற்ற  மாணவர்களின்  பெற்றோர்களும் ,  இவர்களுக்கு கற்பித்த  ஆசிரியர்களும் மற்றும்  2014ஆம்  ஆண்டு  க.பொ.த  உயர் தர  பரீட்சையில்  தோற்றவிருக்கும்  மாணவர்களும்  கலந்துகொண்டனர் .

இறுதி நிகழ்வாக   2014ஆம்  ஆண்டு   க .பொ .த  உயர்  தர  பரீட்சைக்கு  தோற்றவிருக்கும்  மாணவர்களுக்கான  விழிப்புணர்வு  கருத்தரங்கு பொறியியலாளர்  வை . கோபிநாத்  தலைமையில்   இடம்பெற்றது .