அக்கரைப்பற்றில் இன்று பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனங்காடு - சாகாமம் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகியே விபத்துக்குள்ளாகியது.
இதில், அக்கரைப்பற்று கோளாவில் கோபால்கடை வீதியைச் சேர்ந்த மணியம் கருணாநிதி ( 21 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர் அதே வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிசார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
